திருநெல்லி கிராமத்தில் மகாவிஷ்ணு கோவிலில் ராகுல் தரிசனம்

137

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தொகுதிக்குட்பட்ட திருநெல்லி கிராமத்தில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் தரிசனம் செய்தார். கேரள கோவில்களின் பாரம்பரிய வழக்கம் மற்றும் விதிகளின்படி வேட்டியும், மேல் துண்டும் அணிந்து தரிசனம் செய்த அவர் கோவில் விழுந்து வணங்கினார்.