ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக நாளை பொறுப்பேற்கிறார் | அரசியலில் இருந்து சோனியாகாந்தி ஓய்வு ..!

729

அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதாக, சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
132 ஆண்டுகள் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. வீட்டில் இருந்தபடியே கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுத்து வந்தார். சட்டசபை தேர்தல்களின் போதும், அவர் பிரசாரத்திற்கு செல்லவில்லை.
இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் உள்ளதால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தலைவராக நாளை பதவி ஏற்றதும், முழு பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெறுகிறார்.