பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி..!

332

ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் தான் நிற்பதாக, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

முஸ்லீம் தலைவர்களை ராகுல் காந்தி சந்தித்ததை விமர்சித்த பாஜக, காங்கிரஸ் முஸ்லீம்கள் கட்சி எனக் கூறியது. இது குறித்து பிரதமர் மோடியும் கருத்து கூறி இருந்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்து டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி, சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட மக்களின் வரிசையில் கடைசியில் இருக்கும் நபருடன் தான் நிற்பதாக கூறியுள்ளார்.

அவர்களின் மதம், சாதி, நம்பிக்கைகள் தன்னை பொறுத்தவரை சிறியவை என்று தெரிவித்துள்ள அவர், வலியில் இருப்பவர்களை தேடிச் சென்று ஆறுதல் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். எல்லாம் உயிர்களையும் தான் நேசிப்பதாகவும், தான் காங்கிரஸ்காரன் என்றும் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.