சிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி

332

சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காகவே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தென்னிந்தியாவின் குரல் நாட்டின் பிற பகுதிகளில் ஒலிக்க, திருவனந்தபுரம், பத்தினம் திட்டா உள்ளிட்ட தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

தனக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதி வேண்டும் என்பதற்காகவும், சிறுபான்மையினரின் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவும் வயநாடு தொகுதியை அவர் தேர்வு செய்துள்ளதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். கேரளாவில் பின்பற்றி வரும் பாரம்பரிய கலாச்சாரத்தை இடதுசாரி கூட்டணி அரசும், கம்யூனிஸ்ட்களும் அழிக்க அனுமதிக்க முடியாது என்று உறுதிபடக் கூறிய பிரதமர் மோடி, மாநிலத்தை மாறிமாறி ஆட்சி செய்த காங்கிரசும், இடதுசாரியும் முழுக்க, முழுக்க சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாகவும் சாடினார்.