ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரி வருகை!

396

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட நாளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிறார்.
ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட ராகுல் காந்தி நாளை வருகிறார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறவுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளார்.
16 நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி சென்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.