அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு, வயநாடு தொகுதியில் முன்னிலை

175

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், பாஜக 345 இடங்களில் முன்னிலை பெற்று, நாட்டில் அபாரமான கட்சியாக உருவெடுத்துள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்று வரும் நிலையில், அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை விட ஐந்தாயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று பின்தங்கியுள்ளார்.இதனிடையே, ராகுல் காந்தி வீட்டிற்குச் சென்ற சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், டெல்லியில் மாலை 4 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.