ராகுல்காந்தியின் 48 வது பிறந்தநாள் விழா..!

297

ராகுல்காந்தியின் பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது 48 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மேளதாளங்கள் முழங்க ராகுல்காந்தியின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் தமிழகத்தில் கோவில்கள், தேவாலயங்கள், மற்றும் பள்ளிவாசல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சென்னையில் உள்ள சாந்தோம் ஆலயத்தில் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் கேக் வெட்டி ராகுல்காந்தி பிறந்தநாளை கொண்டாடினர்.

இதனிடையே பிரதமர் மோடி ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆரோக்கியமான உடல்நலத்துடன் ராகுல் காந்தி நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதே போல் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும், ராகுல்காந்திக்கு வாழ்த்து கூறியுள்ளார். நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.