ராகுல் தலித் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்-மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

243

ராகுல்காந்தி, தலித் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதால் மட்டுமே சாதி வேற்றுமையை வேரறுத்து விட முடியாது என, மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சாடியுள்ளார்.
மராட்டிய மாநிலம் அகோலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அவ்வப்போது தலித் வீடுகளுக்கு சென்று உணவு சாப்பிட்டு வருவதாக கூறினார். தலித் பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், தகுந்த மணப்பெண்ணை நானே பார்க்கிறேன் என்று ராம்தாஸ் அத்வாலே குறிப்பிட்டார். கலப்பு திருமணம் செய்த கொண்டு நாட்டிற்கே முன்மாதிரியாக ராகுல் இருக்க வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். சாதி இடர்பாடுகளை களைந்து, பிராமண பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டதாக கூறிய ராம்தாஸ் அத்வாலே, தலித் வீட்டில் ராகுல்காந்தி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதால் மட்டுமே சாதி வேற்றுமையை வேரறுத்து விட முடியாது என உறுதிபடக் கூறினார்.