தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலா ?

87

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றது குறித்துக் கல்லூரிக் கல்வி இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது, அரசியல் தலைவர் பங்கேற்ற கலந்துரையாடலைக் கல்லூரி வளாகத்தில் நடத்தலாமா என்பது குறித்துக் கல்லூரிக் கல்வி இயக்ககம், மண்டல இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.