டெல்லியில் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

298

டெல்லியில் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர். காவல்துறையின் பணிகளுக்கு இடையூறாக இருந்தததால் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் மீண்டும் கைது செய்தனர். இதேபோன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.