பணமதிப்பிழப்பு – நாட்டின் அவமானம்-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…..

128

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொடூரமான சதி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு கோரமான செயல் என்றும், இது பல லட்சம் மக்களையும், ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்களை பாழாக்கியுள்ளது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கள்ள நோட்டு, கறுப்பு பணம் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்கும் அரசின் நோக்கம் எதுவுமே நிறைவேற்ற முடியவில்லை என்றும்,ஆனால், ஏழை, எளிய மக்கள் தங்களது சேவைக் கணக்குக்காக அவர்கள் பல நாட்கள் வரிசையில் நிற்க தள்ளப்பட்டனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பணமதிப்பிழப்பு வெறும் மோசமான சிந்தனை மட்டுமல்ல, தவறாக செயல்படுத்தப்பட்ட ஒரு பொருளாதார திட்டம் என சுட்டிக்காட்டியுள்ள ராகுல்,நவம்பர் 8-ம் தேதி தீய செயலுக்கான தினம் என்று இந்திய வரலாற்றில் எப்போதும் அழியாமலே இருக்கும் என கூறியுள்ளார்.