உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் பயணம் ஏன்? – காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி

819

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்வது எதற்காக என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ளதற்கு உண்மையான காரணம் என்ன என்றும் வினா எழுப்பியுள்ளார். மேலும் நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு பதில் அளிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கிவிட்டதாக விமர்சனம் செய்துள்ள ராகுல், பிரதமரின் விளக்கங்களை நியாயப்படுத்தவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்..