தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – ராகுல் காந்தி

117

தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், ரத்த அழுத்த குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், ஆகியோர், கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தார். இதனிடையே, கருணாநிதியை நேரில் சந்தித்து ராகுல்காந்தி நலம் விசாரிப்பது போன்ற புகைப்படத்தை மருத்துவமனை வெளியிட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், கருணாநிதி நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.