பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வீழ்த்தும் வேட்பாளரை ஆதரிக்க தயார் – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

361

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வீழ்த்தும் வேட்பாளரை ஆதரிக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பெண் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மக்களவையில் 22 சதவீத இடங்களை கொண்ட உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் பா.ஜ.கவை வீழ்த்த புதிய கூட்டணியை அமைக்க தயார் என்றார். தெலுங்கு தேசம், சிவ சேனா கட்சிகள் பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக திரும்பி இருப்பது காங்கிரஸுக்கு வலுசேர்த்திருப்பதாக சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி, தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு பகடைகாய் விழுவது போன்றது என கூறினார்.

அதேசமயம் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வீழ்த்தும் வேட்பாளரை ஆதரிக்க தயார் என்று அவர் அறிவித்திருப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி வழங்கியது குறிப்பிடத்தக்கது.