கட்டிப்பிடி வைத்தியத்தை ராகுலுக்கு கமல் கற்றுக் கொடுத்திருப்பாரோ? – பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

432

பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கட்டுபிடித்தது மரபு மீறிய செயல் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றச்சாட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், படிக்கட்டில் தொங்கியபடி ரெயிலில் பயணம் செய்த இளைஞர்கள் 4 பேர் பக்கவாட்டு சுவரில் மோதி உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தக்கது என்றார். சென்னை பரங்கிமலை ரெயில்வே போலீசார் எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என எச்.ராஜா குறிப்பிட்டார். பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி கட்டுபிடித்தது, மரபு மீறிய செயல் என்று அவர் குற்றச்சாட்டினார். கட்டிப்பிடி வைத்தியத்தை ராகுலுக்கு கமல்ஹாசன் கற்றுக் கொடுத்திருப்பாரோ என்று தோன்றுவதாகவும் எச்.ராஜா கூறினார்.