காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேற்று வெளிநாடு பயணமானார். எனினும், அவர் எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்ற தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

284

ராகுல் காந்தியின் 46-ஆவது பிறந்த நாள் விழா, கடந்த 19-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ராகுல்காந்தி, வெளிநாட்டுக்குப் பயணமானார். இது குறித்து, அவர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தான் சில நாள்களுக்கு வெளிநாட்டில் தங்க உள்ளதாகவும், தன்னுடைய பிறந்த நாள் அன்று வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால் எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்ற தகவலை ராகுல் டுவிட்டரில் தெரிவித்திருக்கவில்லை.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றபோது, அதில் பங்கேற்காமல் வெளிநாட்டில் 56 நாட்கள் ராகுல் தங்கியிருந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.