பல்வேறு மாநிலங்களுக்கு புதிதாக 9 செயலாளர்களை நியமனம் செய்து உத்தரவு..!

168

காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக 9 செயலாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி கடந்த ஆண்டு பொறுப்பேற்றது முதல் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இதன் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களுக்கு புதிதாக 9 செயலாளர்களை நியமனம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான செயலாளராக ஷகீல் அகமதுவும், உத்தரகாண்டுக்கு ராஜேஷ் தமானியும், மேற்குவங்கத்திற்கு பி.பி.சிங், முகமது ஷாவீத், சரத் ரவுத் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட இனத்தலைவர் அல்பேஸ் தாகூர் பீகாருக்கான செயலாளராகவும், மகாராஷ்டிராவுக்கான கட்சியின் செயலாளர்களாக சல்லா வம்சி சந்த் ரெட்டி மற்றும் சந்தீப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மகளிர் காங்கிரசின் பொதுச்செயலாளராக ரேபரலி சதார் தொகுதி எம்எல்ஏ அதிதி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கட்சியின் பொறுப்பு செயலாளராக முன்னாள் எம்எல்சி சஞ்சய் தத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த தீபக் ரதோத், உத்தரகாண்டை சேர்ந்த ராஜ்பால் பிஷ்த் ஆகியோர் கட்சியின் ஆய்வு கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.