ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்திற்கு தடை?

1767

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்திற்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு ஆளும் பாஜக தரப்பில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாவதால், அது தொடர்பான ஒப்பந்தத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி, எம்.எல். சர்மா எனும் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ள