மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி : ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி ..!

1140

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கால் இறுதியில் ரபெல் நடால், டொமினிக் திம்மிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
3வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் 6க்கு 3, 6க்கு 4 என்ற நேர் செட்டில் கணக்கில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை தோற்கடித்தார். இதன் மூலம் களிமண் தரை ஆடுகளத்தில் நடால் தொடர்ச்சியாக 50 செட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.

நேற்று நடைபெற்ற கால்இறுதி போட்டியில், 7-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை ரபெல் நடால் எதிர்கொண்டார். இதில் நடால் 5 க்கு 7, 3 க்கு 6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.