விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, பாசனத்திற்காக கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

251

விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, பாசனத்திற்காக கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதிகளில் பாசனத்திற்காக, கன்னியாகுமரி கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, பாசனத்திற்காக,கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து, ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், ராதாபுரம் பகுதியில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.