வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொன். ராதா கிருஷ்ணன் ஆய்வு..!

279

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அரசு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பார்த்திவபுரம் முகாம்களி்ல் தங்கியுள்ள மக்களையும் அவர் சந்தித்து, பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலும் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளநிலையில், அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாக கூறினார்.

எனவே, முகாம்களில் தங்கியிருப்பவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.