சமூகவலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் – சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

90

கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் பரவுவதாக வரும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சனகுளத்தை சேர்ந்த ஜெயமணி என்பவர் மூளைக்காய்ச்சலால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் கூறினார். புயல் பாதித்த மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் பரவுகிறது என்று சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.