பாராசூட், பாரா கிளைடிங், பலூன்களில் பறந்து அசத்திய வீரர்கள்..!

584

சீனாவில் நடைபெற்ற 45-வது சர்வதேச பறக்கும் போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

சீனாவில் இகாரஸ் கோப்பைக்கான 45வது சர்வதேச பறக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. வடமேற்கு சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில் 10 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். 1974ம் ஆண்டுக்குப் பின்னர் பிரான்ஸ் தவிர்த்து இந்தப் போட்டிகள் சீனாவில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வீரர்கள், பாராசூட், பாராகிளைடிங், பலூன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தி வானில் பறந்ததை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.