ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் : புதிய சர்ச்சையை

806

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என புதிய சர்ச்சையை பிரான்ஸ் பத்திரிகை கிளப்பியுள்ளது.

பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பர் 23-ஆம் தேதியில், ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், பிரான்சிலிருந்து வெளிவரும் மீடியாபார்ட் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த விவகாரம் பற்றிய தகவல், டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளதாக மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.