திரிபுரா எல்லையில் ராணுவ வீரர் உயிரிழப்பு | சொந்த ஊரில் உறவினர்கள் சோகம்

269

திரிபுரா எல்லையில் பணிபுரிந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கெவின்ராஜ் நேற்று முந்தினம் உயிரிழந்தார். பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த கெவின்ராஜ் கடந்த 9 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். திரிபுரா எல்லையில் பணியாற்றிய அவர் பணியின் போது மரணம் அடைந்ததாக ராணுவத்தினர் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.