இந்தோனேசியாவில் 8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம்..!

465

இந்தோனேசியாவில் ஆறு புள்ளி இரண்டு ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் டிமோர் தீவு குபாங் நகர் அருகே உள்ள கடற்கரை பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குள் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோலில் ஆறு புள்ளி இரண்டு அலகுகளாக பதிவாகி உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கைகள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களும் முழுமையாக வெளியிடப்படாமல் உள்ளது. இந்தோனேசியாவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.