இந்தியாவுடனான வெளியுறவு கொள்கைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குடியரசு தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

145

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் தனது மனமார்ந்த இந்திய குடியரசு தின விழா வாழ்த்துக்களை மோடி ஏற்றுகொள்ள வேண்டும் என அவர் கேட்டுகொண்டுள்ளார். சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா ஆக்கபூர்வமாக பங்காற்றி வருவதாக தெரிவித்துள்ள அவர், இந்தியாவுடனான ரஷ்யாவின் வெளியுறவு கொள்கைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.