புதுச்சேரி சார்பில் உறுப்பினர்கள் நியமனம்..!

352

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதுச்சேரி அரசு சார்பில் 2 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் தலா 2 பேர் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதனிடையே தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிப்பட்டுள்ளனர். இதேபோன்று புதுச்சேரி அரசும் உறுப்பினர்களை அறிவித்துள்ளது. அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளர் சண்முகசுந்தரம், நீர்வளத்துறை செயலாளர் அன்பரசு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் 4 மாநிலங்களும் தங்கள் உறுப்பினர்களை நியமித்து வருகின்றன.