புதுச்சேரியில் இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை..!

215

புதுச்சேரியில் இன்று மீண்டும் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்பட உள்ளது.

புதுச்சேரியில், 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி கடந்த மாதம் 2-ம் தேதி தாக்கல் செய்தார். இதனையடுத்து கடந்த 19ம் தேதி அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. ஆனால் நிதி மசோதாவுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசு நியமித்துள்ள பா.ஜ.க எம்.எல்.ஏக்களை அனுமதித்து நிதி மசோதாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என என்ற நிபந்தனையுடன் ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தார். இதன்படி இன்று மீண்டும் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்பட உள்ளது.