நியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு!!

410

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரை அனுமதிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல், பா.ஜ.க. வை சேர்ந்த சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. ஆனால் இவர்கள் 3 பேரையும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு தெரிவித்தார். மேலும் நியமன எம்.எல்.ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது.

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்களை புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும் லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.