புதுச்சேரியில் அரசு பேருந்தை தீ வைத்து எரித்தவர்கள் கைது

279

புதுச்சேரி அருகே அரசுப் பேருந்தை தீவைத்து எரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாமக மூத்த தலைவர் காடு வெட்டி குரு உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேருந்துகளை அடித்து உடைத்தனர். அந்த வகையில் புதுச்சேரி காலாப்பட்டில் நேற்று முன் தினம் இரவு 5 பேர் கொண்ட கும்பல் அரசுப் பேருந்துக்கு தீ வைத்தது. இதில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்திய போலீசார் பேருந்தை தீ வைத்து எரித்த விழுப்புரம் மாவட்ட பாமக இளைஞரணி துணைத் தலைவர் அருண் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.