காவல் துணை இயக்குனரின் புத்தகம் வெளியீடு விழாவில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பங்கேற்ப்பு..!

273

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.

புதுச்சேரி காவல் துறை இயக்குனர் சுனில்குமார் கவுதம் எழுதிய இந்திய அரசியல் அமைப்பு சாசனம் மற்றும் ஒவ்வொரு குழந்தையும் ஜீனியஸ் ஆகலாம் என்ற இரண்டு புத்தகங்களின் வெளியிட்டு விழா புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தப் புத்தகங்களை முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டார்கள். இந்த விழாவில் பேசிய இருவரும், வட மாநிலத்தை சேர்ந்த காவல் துறை இயக்குனர் சுனில்குமார் கவுதம் இந்தியில் வெளியான புத்தகங்களை தமிழில் மொழியாக்கம் செய்தது பாராட்டுக்குரியது என்று புகழாரம் சூட்டினர்.