புதுச்சேரி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து – துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

346

நாளை பிறந்தநாள் கொண்டாடும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.

நேற்றுடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று கிரண் பேடிக்கு அம்மாநில எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். இதனிடையே நாளை 71வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவரது வீட்டிற்கே நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஆளுநர் மாளிகையிலிருந்து சைக்கிளில் முதலமைச்சர் வீடு வரை பயணித்த கிரண் பேடி, வழியில் கூலித்தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.