புதிய அதிபராக மூன் ஜயே-இன் பதவியேற்பு !

287

தென்கொரிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட மூன் ஜயே-இன், வடகொரியா பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
தென் கொரியா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் மூன் ஜயே-இன் 41 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து புதிய அதிபராக அவர் பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மூன் ஜயே இன், வடகொரியாவுடனான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். சரியான சூழல் அமைந்தால் வடகொரியா செல்லத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். தென் கொரிய அதிபரின் இந்த அறிவிப்பு உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.