பஞ்சாபில், போலீசார் நடத்திய வாகன சோதனையில் 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

202

பஞ்சாபில், போலீசார் நடத்திய வாகன சோதனையில் 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு லூதியானா மாவட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதையின் போது, 75 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, அந்த காரில் இருந்த 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ரொட்டி நிறுவன ஊழியர்கள் என்றும், விற்பனை தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அந்த 4 பேரிடமும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.