2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் – பிரதமர் மோடி

941

விவசாயிகளின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் வழங்கவில்லை என்றும், வாக்கு வங்கியாக மட்டுமே அவர்களை பயன்படுத்தியதாகவும், பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மாலவுட் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 70 ஆண்டுகளாக விவசாயிகளின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தை காங்கிரஸ் வழங்கியவில்லை என்று குறிப்பிட்டார். வாக்குறுதிகளை மட்டும் அளித்து விட்டு, ஒரு குடும்பத்திற்காக மட்டுமே அந்தக் கட்சி பாடுபட்டதாக சாடிய மோடி, பாஜக அரசு விவசாயிகளின் நிலையை மாற்றி இருப்பதாக தெரிவித்தார்.

அனைத்து மாநில விவசாயிகளும் பயன்படும் வகையிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், விவசாயிகள் நிம்மதியாக உறங்குவதாவும், எதிர்க்கட்சிகள் தூக்கம் இன்றி தவிப்பதாகவும் விமர்சித்தார். 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.