1.70 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் | ஜனவரி 24 ஹஜ் பயணத்திற்கான முன்பதிவு கடைசி நாள்.

138

ஹஜ் புனித பயணம் செல்ல இந்த ஆண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை, சவுதி அரேபிய அரசுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் செல்ல ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் அனுமதி வழங்க ஹஜ் கமிட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். ஹஜ் பயணத்திற்கான முன்பதிவு கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதற்கான கடைசி நாள் ஜனவரி 24-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.