12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடவாரியாக தேர்ச்சி விகிதம்..!

440

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாட வாரியாக மாணவ மாணவிகள் பெற்றுள்ள தேர்ச்சி விகிதத்தை காணலாம்.

மொழிப்பாடத்தில் 96.8 சதவீதமும்,
ஆங்கிலத்தில் 96.9 சதவீதமும்,
கணிதத்தில் 96.1 சதவீத மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதே போல், இயற்பியலில் 96.4 சதவீத தேர்ச்சியையும்,
வேதியியலில் 95 சதவீத தேர்ச்சியையும்,
உயிரியல் பாடத்தில் 96.3 சதவீத தேர்ச்சியும் கிடைத்துள்ளது.
தாவரவியல் பாடத்தில் 93.9 சதவீத தேர்ச்சியையும்,
விலங்கியலில் 91.9 சதவீத தேர்ச்சியையும்,
நர்சிங் பாடத்தில் 97.86 சதவீத தேர்ச்சியையும் மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்.
கணினி அறிவியலில் 96.1 சதவீதமும்,
வரலாற்றில் 89.1 சதவீதமும்,
புவியியல் பாடத்தில் 99.2 சதவீத தேர்ச்சியும் கிடைத்துள்ளது.
பொருளாதார பாடத்தை பொறுத்தவரை 90.9 சதவீத தேர்ச்சியையும்,
காமர்ஸ் பாடத்தில் 90.3 சதவீதமும்,
கணக்குப்பதிவியல் பாடத்தில் 91 சதவீத தேர்ச்சியையும் மாணவர்கள் பெற்றுள்ளனர்.