உலக புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

266

உலக புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள புலிகளின் வாழ்விடங்களை காக்கும் பொருட்டும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடனும் உலகம் முழுவதும் புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதில் புலி முகமூடியை அணிந்தும், புலிகள் போல் வேடம் தரித்தும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இதில். “வனங்களைக் காப்போம், புலிகளைக் காப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் கோஷமிட்டு சென்றனர்.