புழல் சிறையில் பிரபல ரவுடி அடித்துக் கொலை ..!

245

புழல் சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி மல்லி காலனியை சேர்ந்த பிரபல ரவுடி பாக்சர் முரளி. இவர் மீது கொடுங்கையூர், மாதவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் அவனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் முரளியின் எதிர்தரப்பு ரவுடியான நாகேந்திரன் என்பவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருவர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், நாகேந்திரனின் கூட்டாளிகள் பாக்சர் முரளியை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த முரளியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து புழல் சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.