சாராயக் கடை மற்றும் கள்ளுக்கடை ஏலம்..!

409

புதுச்சேரியில் சாராயம் மற்றும் கள்ளுக் கடைகளுக்கான ஏலம் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மதுவிலக்கு துறை அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் இன்றும் நாளையும் சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடைகளுக்கான ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. புதுச்சேரி அரசுக்கு சாராயக்கடை, கள்ளுக்கடை மற்றும் மதுபானக் கடைகள் மூலம் 800 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.