தடையை மீறி நடைபெற்ற மாட்டு வண்டி போட்டி..!

176

புதுக்கோட்டை அருகே தடையை மீறி நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

திருமயம் அருகே மாவூரில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். இந்தநிலையில், சோலைபிராட்டி அம்பாள் உற்சவத்தை முன்னிட்டு தடையை மீறி மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதில், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 34 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகள் என இரண்டாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

சீறி பாய்து ஓடிய மாட்டு வண்டியை காண, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.