புதுக்கோட்டை அரசு பேருந்து மருத்துவமனை நுழைவு வாயிலில் மோதி விபத்து!

299

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 24 பயணிகள் காயமடைந்தனர்.
கந்தர்வக் கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை கணேசன் என்பவர் ஓட்டிச் சென்றார். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர் உட்பட பேருந்தில் பயணம் செய்த 24 பேர் காயமடைந்தனர். ice_screenshot_20171031-194602