புதுக்கோட்டையில் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைளை மோசடி செய்ததாக வங்கியை முற்றுகையிட்டு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

237

புதுக்கோட்டையில் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைளை மோசடி செய்ததாக வங்கியை முற்றுகையிட்டு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த வங்கியில் பணிபுரியும் அப்ரைசர் சிவக்குமார் என்பவர் அடகில் இருந்த சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கநகைகளுக்கு பதிலாக, கவரிங் நகையை வைத்து மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. ஆனால் வங்கி நிர்வாகம் கவரிங் நகைகளை அடகு வைத்ததாக பொதுமக்களை குற்றம் சாட்டியுள்ளது. தலைமறைவான சிவக்குமாரை பிடித்து, தங்கள் நகைகளை மீட்டு தருமாறு ஏராளமான பெண்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.