புதுக்கோட்டையில் தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

242

புதுக்கோட்டையில் தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பொருளாளர் சரவணன், மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமிசத்திய மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கலந்தாய்வு விதிமுறைகளில் முந்தைய ஆண்டுகளின் நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதில் கால நீடிப்பு செய்யாமல், சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலகம் எதிரில், மாவட்ட தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் மாதப்பன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில், நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் விகிதம் 1 ஈஸ்ட் 1 என நியமிக்க வேண்டும் எனவும், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக செல்வதற்கு தடையாக உள்ள ஆணையை நீக்கி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வினை உடனடியாக நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.