கேட்பாரற்று கிடந்த பையில் 16 பஞ்சலோக சிலைகள் !!!

397

புதுக்கோட்டை அருகே கேட்பாரற்று கிடந்த பையில், 16 பஞ்சலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே மதுரைக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள கழிப்பறையில் வெள்ளை நிற பை கேட்பாற்று கிடந்தது. இதனை துப்புரவு தொழிலாளர்கள் பிரித்து பார்த்தபோது, 16 பஞ்சலோக சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர், ஆணையர், மற்றும் காவல் ஆய்வாளர்கள், சிலைகளை கைப்பற்றி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். பையில் மலையாள எழுத்துக்கள் அச்சிடப்பட்டதால், கேரளாவை சேர்ந்தவர்கள் யாரேனும் சிலையை கடத்தினர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.