புதுச்சேரி மாநிலத்தின் விடுதலை திருநாளையொட்டி, முதலமைச்சர் நாராயணசாமி தேசியகொடி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சுக்காரர்கள் ஆதிக்கத்தில் இருந்து, கடந்த 1954ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி விடுதலை பெற்றது. இதனை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், வீரவிளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ice_screenshot_20171101-171414