புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை…. அதிமுகவினர் நேரில் சென்று வழிபாடு

157

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முதன்முறையான புதுவையில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட திருக்கனூர் ராஜா முகம்மது நகரில், ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கலச் சிலை புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக நிர்வாகி நாசர் வெண்கல சிலையை திறந்து வைத்தார். இதில் திருக்கனூர் மகளிர் மாநில இணை செயலாளர் மகாதேவி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். 7 அடி உயரம் கொண்ட இந்த வெண்கல சிலைக்கு அதிமுகவினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் நினைவாக தஞ்சையில் உள்ள அதிமுக தொண்டர் ஒருவர், அங்கு கோயில் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.