புதுச்சேரியில் கனமழையினால் 10 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாத மீனவர்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என வலிறுத்தியுள்ளனர்
தேங்காய்திட்டு துறைமுகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் மழையின் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவ சங்க செயலாளர் முத்துராமன், கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மழைக்காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.