போலி ஏ.டி.எம். கார்டு மூலம் வங்கி கணக்குகளில் மோசடி செய்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரை சி.பி.சி.ஐ. டி போலீசார் கைது

356

புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் வங்கி கணக்குகளில் மோசடி செய்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரை சி.பி.சி.ஐ. டி போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் மோசடி செய்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் மோசடியில் ஈடுபட்ட பாலாஜி, சந்துரு உள்பட 5 பேரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த என். ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யாவை சி.பி.சி.ஐ டி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க பிரமுகர் சந்துருவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.